கந்த சஷ்டி கவசம்

Auto-scrollSpeed 3

Touch the screen or press any key to pause.

Reading settings

Text size
Show
Layout (wide screens)
Line spacing
  1. கந்த சஷ்டி கவசம்

  2. காப்பு

  3. துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.

  4. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

  5. நூல்

  6. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட

  7. மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக

  8. இந்திரன் முதலா எண்டிசை போற்றி மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக

  9. ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக

  10. ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென

  11. வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

  12. பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

  13. கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

  14. ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

  15. ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

  16. முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

  17. இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென

  18. நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

  19. டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து

  20. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று

  21. உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க

  22. அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க

  23. நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

  24. கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க

  25. வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க

  26. வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க

  27. பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

  28. கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

  29. முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க

  30. எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

  31. ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க

  32. பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

  33. கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

  34. கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

  35. ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன்

  36. மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

  37. அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

  38. வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய

  39. கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

  40. குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப்

  41. புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

  42. ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

  43. குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும்

  44. எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

  45. மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே

  46. பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே

  47. கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

  48. பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே

  49. காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக

  50. ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக

  51. அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

  52. வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம்

  53. வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

  54. பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

  55. கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

  56. நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

  57. அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

  58. நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை

  59. வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும்

  60. சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

  61. குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

  62. மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி!

  63. இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

  64. மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சண்முகா சரணம்!

Roman transliteration (IAST)

Automatic transliteration.

  1. kanta caṣṭi kavacam

  2. kāppu

  3. tutipporkku valviṉai pom; tuṉpampom; nèñcil patipporkkuc cèlvam palittuk-katittoṅkum niṣṭaiyum kaikūṭum, nimalararul̤ kantar caṣṭi kavacam taṉai.

  4. amara riṭartīra amaram purinta kumaraṉaṭi nèñce kuṟi.

  5. nūl

  6. caṣṭiyai nokkac caravaṇa pavaṉār ciṣṭaruk kutavum cèṅkatir veloṉ pātam iraṇṭil paṉmaṇic cataṅkai kītam pāṭak kiṇkiṇi yāṭa

  7. maiyal naṭaṉañcèyyum mayilvā kaṉaṉār kaiyil velāl èṉaik kākkavèṉ ṟuvantu varavara velā yutaṉār varuka varuka varuka mayiloṉ varuka

  8. intiraṉ mutalā èṇṭicai poṟṟi mantira vaṭivel varuka varuka! vācavaṉ marukā varuka varuka necak kuṟamakal̤ niṉaivoṉ varuka

  9. āṟumukam paṭaitta aiyā varuka nīṟiṭum velavaṉ nittam varuka cirakiri velavaṉ cīkkiram varuka! caravaṇa pavaṉār caṭutiyil varuka

  10. rahaṇa pavaca ra ra ra ra ra ra ra rihaṇa pavaca ri ri ri ri ri ri ri vinapava carahaṇa vīrā namonama nipava carahaṇa niṟaniṟa niṟèṉa

  11. vacara vaṇapa varuka varuka acurar kuṭikèṭutta aiyā varuka èṉṉai āl̤um il̤aiyoṉ kaiyil paṉṉiraṇ ṭāyutam pācāṅ kucamum

  12. paranta viḻikal̤ paṉṉiraṇ ṭilaṅka viraintèṉaik kākka veloṉ varuka aiyum kiliyum aṭaivuṭaṉ cavvum uyyòl̤i cauvum uyiraiyum kiliyum

  13. kiliyuñ cauvum kil̤aròl̤i yaiyum nilaipèṟ ṟèṉmuṉ nittamum òl̤irum caṇmukaṉ nīyum taṉiyòl̤i yòvvum kuṇṭali yāmciva kukaṉ tiṉam varuka!

  14. āṟu mukamum aṇimuṭi āṟum nīṟiṭu nèṟṟiyil nīṇṭa puruvamum paṉṉiru kaṇṇum paval̤accèv vāyum naṉṉèṟi nèṟṟiyil navamaṇic cuṭṭiyum

  15. īrāṟu cèviyil ilakukuṇ ṭalamum āṟiru tiṇpuyat taḻakiya mārpil palpū ṣaṇamum patakkamum tarittu naṉmaṇi pūṇṭa navaratṉa mālaiyum

  16. muppuri nūlum muttaṇi mārpum cèppaḻa kuṭaiya tiruvayi ṟuntiyum tuvaṇṭa maruṅkil cuṭaròl̤ip paṭṭum navarattiṉam patitta naṟcī rāvum

  17. irutòṭai yaḻakum iṇaimuḻan tāl̤um tiruvaṭi yataṉil cilampòli muḻaṅka cèkakaṇa cèkakaṇa cèkakaṇa cèkaṇa mòkamòka mòkamòka mòkamòka mòkèṉa

  18. nakanaka nakanaka nakanaka nakèṉa ṭikukuṇa ṭikuṭiku ṭikukuṇa ṭikuṇa rararara rararara rararara rarara riririri riririri riririri ririri

  19. ṭuṭuṭuṭu ṭuṭuṭuṭu ṭuṭuṭuṭu ṭuṭuṭu ṭakuṭaku ṭikuṭiku ṭaṅku ṭiṅkuku vintu vintu mayiloṉ vintu muntu muntu murukavel̤ muntu

  20. èṉṟaṉai yāl̤um erakac cèlva maintaṉ veṇṭum varamakiḻn tutavum lālā lālā lālā vecamum līlā līlā līlā viṉo taṉèṉṟu

  21. uṉ tiruvaṭiyai uṟutiyèṉ ṟèṇṇum èntalai vaittuṉ iṇaiyaṭi kākka èṉṉuyirk kuyirām iṟaivaṉ kākka paṉṉiru viḻiyāl pālaṉaik kākka

  22. aṭiyeṉ vataṉam aḻakuvel kākka pòṭipuṉai nèṟṟiyaip puṉitavel kākka katirvel iraṇṭum kaṇṇiṉaik kākka viḻi cèvi iraṇṭum velavar kākka

  23. nācikal̤i raṇṭum nalvel kākka peciya vāytaṉaip pèruvel kākka muppat tirupal muṉaivel kākka cèppiya nāvaic cèvvel kākka

  24. kaṉṉami raṇṭum katirvel kākka èṉṉil̤aṅ kaḻuttai iṉiyavel kākka mārpai ratṉa vaṭivel kākka ceril̤a mulaimār tiruvel kākka

  25. vaṭive lirutol̤ val̤ampèṟak kākka piṭarika l̤iraṇṭum pèruvel kākka aḻakuṭaṉ mutukai arul̤vel kākka paḻupati ṉāṟum paruvel kākka

  26. vèṟṟivel vayiṟṟai vil̤aṅkave kākka ciṟṟiṭai yaḻakuṟac cèvvel kākka nāṇāṅ kayiṟṟai nalvel kākka āṇ kuṟiyiraṇṭum ayilvel kākka

  27. piṭṭa miraṇṭum pèruvel kākka vaṭṭak kutattai vaṭivel kākka paṇait tòṭai iraṇṭum paruvel kākka

  28. kaṇaikkāl muḻantāl̤ katirvel kākka aiviral aṭiyiṉai arul̤vel kākka kaikal̤i raṇṭum karuṇaivel kākka

  29. muṉkaiyi raṇṭum muraṇvel kākka piṉkaiyi raṇṭum piṉṉaval̤ irukka nāvil carasvati naṟṟuṇai yāka nāpik kamalam nalvel kākka muppāl nāṭiyai muṉaivel kākka

  30. èppòḻu tumèṉai ètirvel kākka aṭiyeṉ vacaṉam acaivul̤a neram kaṭukave vantu kaṉakavel kākka varumpakal taṉṉil vacciravel kākka araiyirul̤ taṉṉil aṉaiyavel kākka

  31. emattil cāmattil ètirvel kākka tāmatam nīkkic caturvel kākka kākka kākka kaṉakavel kākka nokka nokka nòṭiyil nokka tākka tākka taṭaiyaṟak tākka

  32. pārkka pārkka pāvam pòṭipaṭa pilli cūṉiyam pèrumpakai akala valla pūtam valāṭṭikap peykal̤ allaṟ paṭuttum aṭaṅkā muṉiyum pil̤l̤aikal̤ tiṉṉum puḻakkaṭai muṉiyum

  33. kòl̤l̤ivāyp peykal̤um, kuṟal̤aip peykal̤um pèṇkal̤ait tòṭarum piramarāṭ catarum aṭiyaṉaik kaṇṭāl alaṟik kalaṅkiṭa iricu kāṭṭeri ittuṉpa ceṉaiyum èllilum iruṭṭilum ètirppaṭum aṇṇarum

  34. kaṉapūcai kòl̤l̤um kāl̤iyo ṭaṉaivarum viṭṭāṅ kārarum mikupala peykal̤um taṇṭiyak kārarum caṇṭāl̤ar kal̤um èṉpèyar còllavum iṭiviḻun toṭiṭa

  35. āṉai yaṭiyiṉil arumpā vaikal̤um pūṉai mayirum pil̤l̤aikal̤ èṉpum nakamum mayirum nīl̤muṭi maṇṭaiyum pāvaika l̤uṭaṉe palakala cattuṭaṉ

  36. maṉaiyiṟ putaitta vañcaṉai taṉaiyum òṭṭiyac cèrukkum òṭṭiya pāvaiyum kācum paṇamum kāvuṭaṉ coṟum otum añcaṉamum òruvaḻip pokkum

  37. aṭiyaṉaik kaṇṭāl alaintu kulaintiṭa māṟṟār vañcakar vantu vaṇaṅkiṭa kālatū tāl̤èṉaik kaṇṭāṟ kalaṅkiṭa añci naṭuṅkiṭa araṇṭu puraṇṭiṭa

  38. vāyviṭ ṭalaṟi matikèṭ ṭoṭa paṭiyiṉil muṭṭa pācak kayiṟṟāl kaṭṭuṭaṉ aṅkam kataṟiṭak kaṭṭu kaṭṭi uruṭṭu kaikāl muṟiya

  39. kaṭṭu kaṭṭu kataṟiṭak kaṭṭu muṭṭu muṭṭu muḻikal̤ pituṅkiṭa cèkku cèkku cètil cètilāka còkku còkku cūrppakaic còkku

  40. kuttu kuttu kūrvaṭi velāl paṟṟu paṟṟu pakalavaṉ taṇalèri taṇalèri taṇalèri taṇalatu vāka viṭu viṭu velai vèkuṇṭatu voṭap

  41. puliyum nariyum puṉṉari nāyum èliyum karaṭiyum iṉit tòṭarn toṭa tel̤um pāmpum cèyyāṉ pūrāṉ kaṭiviṭa viṣaṅkal̤ kaṭittuya raṅkam

  42. eṟiya viṣaṅkal̤ èl̤ituṭaṉ iṟaṅka òl̤ippuñ cul̤ukkum òrutalai noyum vātañ cayittiyam valippup pittam cūlaicayaṅ kuṉmam còkkuc ciraṅku

  43. kuṭaiccal cilanti kuṭalvip piriti pakkap pil̤avai paṭartòṭai vāḻai kaṭuvaṉ paṭuvaṉ kaittāl̤ cilanti paṟkut taraṇai paruarai yāppum

  44. èllāp piṇiyum èṉṟaṉaik kaṇṭāl nillā toṭa nīèṉak karul̤vāy īreḻu ulakamum èṉak kuṟavāka āṇum pèṇṇum aṉaivarum èṉakkā

  45. maṇṇā l̤aracarum makiḻntuṟa vākavum uṉṉait tutikka uṉ tiru nāmam caravaṇa pavaṉe cailòl̤i pavaṉe tiripura pavaṉe tikaḻòl̤i pavaṉe

  46. paripura pavaṉe pavamòl̤i pavaṉe aritiru marukā amarā vatiyaik kāttut tevarkal̤ kaṭumciṟai viṭuttāy kantā kukaṉe katirve lavaṉe

  47. kārttikai maintā kaṭampā kaṭampaṉai iṭumpaṉai yaḻitta iṉiyavel murukā taṉikā calaṉe caṅkaraṉ putalvā katirkā mattuṟai katirvel murukā

  48. paḻanip pativāḻ pālaku mārā āviṉaṉ kuṭivāḻ aḻakiya velā cèntiṉmā malaiyuṟum cèṅkalva rāyā camarā purivāḻ caṇmukat tarace

  49. kārār kuḻalāl̤ kalaimakal̤ naṉṟāy èṉnā irukka yāṉuṉaip pāṭa èṉait tòṭarntirukkum èntai murukaṉaip pāṭiṉeṉ āṭiṉeṉ paravaca māka

  50. āṭiṉeṉ nāṭiṉèṉ āviṉaṉ pūtiyai neca muṭaṉyāṉ nèṟṟiyil aṇiya pāca viṉaikal̤ paṟṟatu nīṅki uṉpatam pèṟave uṉṉaru l̤āka

  51. aṉpuṭaṉ iraṭci aṉṉamuñ còṉṉamum mèttamèt tāka velā yutaṉār cittipèṟ ṟaṭiyeṉ ciṟappuṭaṉ vāḻka vāḻka vāḻka mayiloṉ vāḻka

  52. vāḻka vāḻka vaṭivel vāḻka vāḻka vāḻka malaikkuru vāḻka vāḻka vāḻka malaikkuṟa makal̤uṭaṉ vāḻka vāḻka vāraṇat tuvacam

  53. vāḻka vāḻkaèṉ vaṟumaikal̤ nīṅka èttaṉai kuṟaikal̤ èttaṉai piḻaikal̤ èttaṉai aṭiyeṉ èttaṉai cèyiṉum pèṟṟavaṉ nīkuru pòṟuppatu uṉkaṭaṉ

  54. pèṟṟaval̤ kuṟamakal̤ pèṟṟava l̤āme pil̤l̤aiyèṉ ṟaṉpāyp piriya mal̤ittu maintaṉèṉ mītuṉ maṉamakiḻn tarul̤it tañcamèṉ ṟaṭiyār taḻaittiṭa arul̤cèy

  55. kantar caṣṭi kavacam virumpiya pālaṉ teva rāyaṉ pakarntataik kālaiyil mālaiyil karuttuṭaṉ nāl̤um ācā rattuṭaṉ aṅkan tulakki

  56. necamuṭaṉ òru niṉaivatu vākik kantar caṣṭik kavacam itaṉaic cintai kalaṅkātu tiyāṉip pavarkal̤ òrunāl̤ muppat tāṟuruk kòṇṭu otiye jèpittu ukantunī ṟaṇiya

  57. aṣṭatik kul̤l̤or aṭaṅkalum vacamāyt ticaimaṉṉa rèṇmar cèyalātu arul̤uvar māṟṟava rallām vantu vaṇaṅkuvar

  58. navakol̤ makiḻntu naṉmai yal̤ittiṭum navamataṉèṉavum nallèḻil pèṟuvar ènta nāl̤um īrèṭṭāy vāḻvār kantarkai velām kavacat taṭiyai

  59. vaḻiyāyk kāṇa mèyyāy vil̤aṅkum viḻiyāṟ kāṇa vèruṇṭiṭum peykal̤ pòllā tavaraip pòṭipòṭi yākkum nallor niṉaivil naṭaṉam puriyum

  60. carva catru caṅkā rattaṭi aṟintèṉa tul̤l̤am aṣṭa laṭcumikal̤il vīralaṭ cumikku viruntuṇa vākac cūrapat māvait tuṇittakai yataṉāl irupat teḻvark kuvantamu tal̤itta

  61. kuruparaṉ paḻanik kuṉṟiṉi lirukkum ciṉṉak kuḻantai cevaṭi poṟṟi! èṉaittaṭut tāṭkòl̤a èṉṟaṉa tul̤l̤am

  62. meviya vaṭivuṟum velavā poṟṟi! tevarkal̤ ceṉā patiye poṟṟi! kuṟamakal̤ maṉamakiḻ kove poṟṟi! tiṟamiku tivviya tekā poṟṟi!

  63. iṭumpā yutaṉe iṭumpā poṟṟi! kaṭampā poṟṟi kantā poṟṟi! vèṭci puṉaiyum vele poṟṟi! uyarkiri kaṉaka capaikko rarace!

  64. mayilnaṭa miṭuvoy malaraṭi caraṇam! caraṇam caraṇam caravaṇa pavaom caraṇam caraṇam caṇmukā caraṇam! caraṇam caraṇam caṇmukā caraṇam!

How to use this page
  1. Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.

  2. Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.

  3. Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.

  4. Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.

  5. Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.

  6. Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.

  7. At the end, Previous and Next take you through the list in order.

All tips

Text: Tamil Wikisource: கந்த சஷ்டி கவசம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.