திருச்சாழல்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ? பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ! 255
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ! 256
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ? தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ! 257
அயனை, அனங்கனை, அந்தகனைச், சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ? நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ! 258
தக்கனையும், எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ? தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண் சாழலோ! 259
அலரவனும், மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ? நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ! 260
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ? சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ! 261
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ? ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ! 262
தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ? பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ! 263
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காணேடீ? ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ! 264
நங்காய்! இதென்னதவம் நரம்போடு எலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ? கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ! 265.
கானார் புலித்தோல் உடை,தலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கிங்கு ஆட்படுவார் ஆரேடீ? ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ! 266
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ? உலகறியத் தீவேளாது ஒழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ! 267
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ? தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலோ! 268
கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ? தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ! 269
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் காணேடீ? அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் ஆயிடினுங் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ! 270
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ? நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென்று ஏத்தினகாண் சாழலோ! 271
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன்று அருளியவாறு என்னேடீ? நலமுடைய நாரணன்தன் நயனம்இடந்து அரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ! 272
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ? எம்பெருமான் ஏதுடுத்தங்கு ஏதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ! 273
அருந்தவருக்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக்கு அருளுமது எனக்கறிய இயம்பேடீ? அருந்தவருக்கு அறமுதல்நான்கு அன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ! 274
திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
pūcuvatum vèṇṇīṟu pūṇpatuvum pòṅkaravam pecuvatum tiruvāyāl maṟaipoluṅ kāṇeṭī? pūcuvatum pecuvatum pūṇpatuvuṅ kòṇṭèṉṉai īcaṉavaṉ èvvuyirkkum iyalpāṉāṉ cāḻalo! 255
èṉṉappaṉ èmpirāṉ èllārkkun tāṉīcaṉ tuṉṉampèy kovaṇamāk kòl̤l̤umatu èṉṉeṭī? maṉṉukalai tuṉṉupòrul̤ maṟaināṉke vāṉcaraṭāt taṉṉaiye kovaṇamāc cāttiṉaṉkāṇ cāḻalo! 256
koyil cuṭukāṭu kòlpulittol nallāṭai tāyumili tantaiyili tāṉtaṉiyaṉ kāṇeṭī? tāyumili tantaiyili tāṉtaṉiyaṉ āyiṭiṉum kāyil ulakaṉaittuṅ kaṟpòṭikāṇ cāḻalo! 257
ayaṉai, aṉaṅkaṉai, antakaṉaic, cantiraṉai vayaṉaṅkal̤ māyā vaṭuccèytāṉ kāṇeṭī? nayaṉaṅkal̤ mūṉṟuṭaiya nāyakaṉe taṇṭittāl cayamaṉṟo vāṉavarkkut tāḻkuḻalāy cāḻalo! 258
takkaṉaiyum, èccaṉaiyum talaiyaṟuttut tevarkaṇam tòkkaṉavan tavartammait tòlaittatutāṉ èṉṉeṭī? tòkkaṉavan tavartammait tòlaittarul̤i arul̤kòṭuttaṅku èccaṉukku mikaittalaimaṟṟu arul̤iṉaṉkāṇ cāḻalo! 259
alaravaṉum, mālavaṉum aṟiyāme aḻaluruvāy nilamutaṟkīḻ aṇṭamuṟa niṉṟatutāṉ èṉṉeṭī? nilamutaṟkīḻ aṇṭamuṟa niṉṟilaṉel iruvaruntam calamukattāl āṅkāram tavirārkāṇ cāḻalo! 260
malaimakal̤ai òrupākam vaittalume maṟṟòrutti calamukattāl avaṉcaṭaiyiṟ pāyumatu èṉṉeṭī? calamukattāl avaṉcaṭaiyiṟ pāyntilal̤el taraṇiyèllām pilamukatte pukappāyntu pèruṅkeṭāñ cāḻalo! 261
kolāla mākik kuraikaṭalvāy aṉṟèḻunta ālālam uṇṭāṉ avaṉcaturtāṉ èṉṉeṭī? ālālam uṇṭilaṉel aṉṟayaṉmāl ul̤l̤iṭṭa melāya tevarèllām vīṭuvarkāṇ cāḻalo! 262
tèṉpāl ukantāṭun tillaicciṟ ṟampalavaṉ pèṇpāl ukantāṉ pèrumpittaṉ kāṇeṭī? pèṇpāl ukantilaṉeṟ petāy irunilattor viṇpāl yokèyti vīṭuvarkāṇ cāḻalo! 263
tāṉantam illāṉ taṉaiyaṭainta nāyeṉai āṉanta vèl̤l̤attu aḻuttuvittāṉ kāṇeṭī? āṉanta vèl̤l̤attu aḻuttuvitta tiruvaṭikal̤ vāṉuntu tevarkaṭkor vāṉpòrul̤kāṇ cāḻalo! 264
naṅkāy! itèṉṉatavam narampoṭu èlumpaṇintu kaṅkāl̤an tol̤mele kātalittāṉ kāṇeṭī? kaṅkāl̤am āmākel̤ kālānta rattiruvar taṅkālañ cèyyat tarittaṉaṉkāṇ cāḻalo! 265.
kāṉār pulittol uṭai,talaiūṇ kāṭupati āṉāl avaṉukkiṅku āṭpaṭuvār āreṭī? āṉālum kel̤āy ayaṉun tirumālum vāṉāṭar kovum vaḻiyaṭiyār cāḻalo! 266
malaiyaraiyaṉ pòṟpāvai vāl̤nutalāl̤ pèṇtiruvai ulakaṟiyat tīveṭṭāṉ èṉṉumatu èṉṉeṭī? ulakaṟiyat tīvel̤ātu òḻintaṉaṉel ulakaṉaittum kalainaviṉṟa pòrul̤kal̤èllām kalaṅkiṭuṅkāṇ cāḻalo! 267
teṉpukka taṇpaṇaicūḻ tillaicciṟ ṟampalavaṉ tāṉpukku naṭṭam payilumatu èṉṉeṭī? tāṉpukku naṭṭam payiṉṟilaṉel taraṇiyèllām ūṉpukka veṟkāl̤ik(ku) ūṭṭāṅkāṇ cāḻalo! 268
kaṭakariyum parimāvum terumukantu eṟāte iṭapamukantu eṟiyavāṟu èṉakkaṟiya iyampeṭī? taṭamatilkal̤ avaimūṉṟun taḻalèritta annāl̤il iṭapamatāyt tāṅkiṉāṉ tirumālkāṇ cāḻalo! 269
naṉṟāka nālvarkkum nāṉmaṟaiyiṉ uṭpòrul̤ai aṉṟāliṉ kīḻiruntaṅku aṟamuraittāṉ kāṇeṭī? aṉṟāliṉ kīḻiruntaṅku aṟamuraittāṉ āyiṭiṉuṅ kòṉṟāṉkāṇ puramūṉṟuṅ kūṭṭoṭe cāḻalo! 270
ampalatte kūttāṭi amutucèyap palitiriyum nampaṉaiyun tevaṉèṉṟu naṇṇumatu èṉṉeṭī? nampaṉaiyum āmākel̤ nāṉmaṟaikal̤ tāmaṟiyā èmpèrumāṉ īcāvèṉṟu ettiṉakāṇ cāḻalo! 271
calamuṭaiya calantaraṉtaṉ uṭaltaṭinta nallāḻi nalamuṭaiya nāraṇaṟkaṉṟu arul̤iyavāṟu èṉṉeṭī? nalamuṭaiya nāraṇaṉtaṉ nayaṉamiṭantu araṉaṭikkīḻ alarāka iṭaāḻi arul̤iṉaṉkāṇ cāḻalo! 272
amparamām pul̤l̤ittol ālālam āramutam èmpèrumāṉ uṇṭacatur èṉakkaṟiya iyampeṭī? èmpèrumāṉ etuṭuttaṅku etamutu cèytiṭiṉum tampèrumai tāṉaṟiyāt taṉmaiyaṉkāṇ cāḻalo! 273
aruntavarukku āliṉkīḻ aṟamutalā nāṉkiṉaiyum iruntavarukku arul̤umatu èṉakkaṟiya iyampeṭī? aruntavarukku aṟamutalnāṉku aṉṟarul̤ic cèytilaṉel tiruntavarukku ulakiyaṟkai tèriyākāṇ cāḻalo! 274
tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/திருச்சாழல் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-thiruchazhal.html