திருப்பள்ளியெழுச்சி
பாட்டு: 01 போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்! சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 02 அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
பாட்டு: 03 கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 04 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
பாட்டு: 05 "பூதங்கள் தோறும் நின்றாய்! "எனின் அல்லால் "போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 06 பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா! செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 07 அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ; இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 08 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்? பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாட்டு: 09 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம் கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார் எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 10 "புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே! திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
pāṭṭu: 01 poṟṟi ! èṉvāḻ mutal ākiya pòrul̤e! pularntatu ; pūṅkaḻaṟ kiṇaituṇai malarkòṇṭu eṟṟiniṉ tirumukattu èmakkarul̤ malarum èḻilnakai kòṇṭuniṉ tiruvaṭi tòḻukom! ceṟṟitaḻk kamalaṅkaṇ malarumtaṇ vayalcūḻ tiruppèrun tuṟaiyuṟai civapèrumāṉe! eṟṟuyar kòṭiyuṭaiyāy! èṉai uṭaiyāy! èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 02 aruṇaṉ intiraṉ ticai aṇukiṉaṉ! irul̤poy akaṉṟatu; utayam niṉ malart tiru mukattiṉ karuṇaiyiṉ cūriyaṉ èḻa èḻa, nayaṉak kaṭimalar malara maṟṟaṇṇal aṅkaṇṇām tiral̤ nirai aṟupatam muralvaṉa ;ivaiyor tiruppèrun tuṟaiyuṟai civapèrumāṉe! arul̤ niti taravarum āṉanta malaiye! alaikaṭale pal̤l̤i èḻuntarul̤āye!
pāṭṭu: 03 kūviṉa pūṅkuyil;kūviṉa koḻi; kurukukal̤ iyampiṉa; iyampiṉa caṅkam; oviṉa tārakai òl̤i; òl̤i utayattu òruppaṭukiṉṟatu; viruppòṭu namakkut teva! naṟ cèṟikaḻaṟ ṟāl̤iṇai kāṭṭāy; tiruppèrun tuṟaiyuṟai civapèrumāṉe! yāvarum aṟivariyāy; èmakkèl̤iyāy èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 04 iṉṉicai vīṇaiyar yāḻiṉar òrupāl! irukkòṭu tottiram iyampiṉar òrupāl; tuṉṉiya piṇaimalark kaiyiṉar òrupāl; tòḻukaiyar aḻukaiyar tuval̤kaiyar òrupāl; cèṉṉiyil añcali kūppiṉar òrupāl; tiruppèrun tuṟaiyuṟai civapèru māṉe! èṉṉaiyum āṇṭukòṇṭu iṉṉarul̤ puriyum èmpèrumāṉ pal̤l̤i èḻuntaru l̤āye !
pāṭṭu: 05 "pūtaṅkal̤ toṟum niṉṟāy! "èṉiṉ allāl "pokkilaṉ varavilaṉ" èṉa niṉaip pulavor kītaṅkal̤ pāṭutal āṭutal allāl keṭṭaṟiyom uṉaik kaṇṭaṟivāraic cītṅkòl̤ vayaltirup pèruntuṟai maṉṉā! cintaṉaik kum ariyāy!èṅkaṇ muṉvantu etaṅkal̤ aṟuttèmmai āṇṭarul̤ puriyum èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 06 pappaṟa vīṭṭirun tuṇarum niṉ aṭiyār pantaṉai vantaṟuttār avar palarum maippuṟu kaṇṇiyar māṉuṭattiyalpiṉ vaṇaṅkukiṉṟār aṇaṅkiṉ maṇavāl̤ā! cèppuṟu kamalam kaṇ malaruntaṇvayal cūḻ tiruppèrun tuṟaiyuṟai civapèrumāṉe! ippiṟap paṟuttèmai āṇṭarul̤ puriyum èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 07 atupaḻac cuvaiyèṉa amutèṉa aṟitaṟku aritèṉa èl̤itèṉa amararum aṟiyār ; ituavaṉ tiruvuru,ivaṉ avaṉ èṉave èṅkal̤ai āṇṭukòṇṭu iṅkèḻuntarul̤um matuval̤ar pòḻiltiru uttarakoca maṅkaiyul̤l̤āy! tiruppèruntuṟai maṉṉā! ètu èmaip paṇikòl̤l̤um āṟu?atu keṭpom; èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 08 muntiya mutal naṭu iṟutiyum āṉāy! mūvarum aṟikilar yāvar maṟṟu aṟivār? pantaṇai viraliyum nīyum niṉ aṭiyār paḻaṅkuṭil tòṟum èḻuntarul̤iya paraṉe! cèntaḻal puraitiru meṉiyum kāṭṭit tiruppèruntuṟai yuṟai koyilum kāṭṭi antaṇaṉ āvatum kāṭṭivantu āṇṭāy! āramute! pal̤l̤i èḻuntarul̤āye!
pāṭṭu: 09 viṇṇakat tevarum naṇṇavum māṭṭā viḻup pòrul̤e! uṉatòḻup paṭiyoṅkal̤ maṇṇakatte vantu vāḻac cèytāṉe vaṇtirup pèruntuṟaiyāy vaḻi aṭiyom kaṇṇakate niṉṟu kal̤itaru teṉe! kaṭalamute!karumpe!virumpaṭiyār èṇṇakattāy! ulakukku uyirāṉāy! èmpèrumāṉ pal̤l̤i èḻuntarul̤āye !
pāṭṭu: 10 "puvaṉiyiṟ poy piṟavāmaiyiṉ nāl̤ nām pokkukiṉṟom avame intap pūmi civaṉ uyyak kòl̤kiṉṟa vāṟèṉṟu" nokkit tiruppèrun tuṟaiyuṟaivāy!tirumālām avaṉ viruppèytavum malaravaṉ ācaip paṭavum niṉ alarnta mèyk karuṇaiyum nīyum avaṉiyiṟ pukuntèmai āṭkòl̤l̤a vallāy! āramute pal̤l̤i èḻuntarul̤āye! tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/திருப்பள்ளியெழுச்சி (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-thiruppalliyezhuchi.html