கோயில் திருப்பதிகம்

Auto-scrollSpeed 3

Touch the screen or press any key to pause.

Reading settings

Text size
Show
Layout (wide screens)
Line spacing
  1. மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே. ⁠388

  2. அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம்மாறு முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரைசே. ⁠389

  3. அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. ⁠390

  4. உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந்துறையுறை சிவனே குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. ⁠391

  5. குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே. ⁠392

  6. இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. ⁠393

  7. இன்றெனக் கருளி இருல்கடிந்துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே. ⁠394

  8. பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறையுறை சிவனே ஆருறவு எனக்கிங் காரய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி. ⁠395

  9. சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே. ⁠396

  10. தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. ⁠397

  11. திருச்சிற்றம்பலம்

Roman transliteration (IAST)

Automatic transliteration.

  1. māṟiniṉṟèṉṉai mayakkiṭum vañcap pulaṉaintiṉ vaḻiyaṭait tamute ūṟiniṉṟèṉṉul̤ èḻuparañcoti ul̤l̤avā kāṇavantarul̤āy teṟaliṉ tèl̤ive civapèrumāṉe tiruppèruntuṟaiyuṟai civaṉe īṟilāp pataṅkal̤ yāvaiyum kaṭanta iṉpame èṉṉuṭai aṉpe. ⁠388

  2. aṉpiṉāl aṭiyeṉ āviyo ṭākkai āṉanta māyk kacinturuka èṉparam allā iṉṉarul̤ tantāy yāṉitaṟ kilaṉòrkaimmāṟu muṉpumāyp piṉpum muḻutumāyp paranta muttaṉe muṭivilā mutale tèṉpèruntuṟaiyāy civapèrumāṉe cīruṭaic civapurattaraice. ⁠389

  3. araicaṉe aṉpark kaṭiyaṉe ṉuṭaiya appaṉe āviyo ṭākkai puraipurai kaṉiyap pukuntuniṉṟurukkip pòyyirul̤ kaṭinta mèyccuṭare tiraipòrā maṉṉum amutat tèṇkaṭale tiruppèruntuṟaiyuṟai civaṉe uraiyuṇar viṟantuniṉṟuṇarvator uṇarve yāṉuṉṉai uraikkumā ṟuṇartte. ⁠390

  4. uṇarnta māmuṉivar umparo ṭòḻintār uṇarvukkun tèrivarum pòrul̤e iṇaṅkili èllā uyirkaṭkum uyire èṉaip piṟap paṟukkum èmmarunte tiṇintator irul̤il tèl̤intatū vèl̤iye tiruppèruntuṟaiyuṟai civaṉe kuṇaṅkal̤ tāmillā iṉpame uṉṉaik kuṟukiṉeṟ kiṉiyèṉṉa kuṟaiye. ⁠391

  5. kuṟaivilā niṟaive kotilā amute īṟilāk kòḻuñcuṭark kuṉṟe maṟaiyumāy maṟaiyiṉ pòrul̤umāy vantèṉ maṉattiṭai maṉṉiya maṉṉe ciṟaipèṟā nīrpol cintaivāyppāyum tiruppèruntuṟaiyuṟai civaṉe iṟaivaṉe nīyèṉ uṭaliṭaṅ kòṇṭāy iṉiyuṉṉai yèṉṉirak keṉe. ⁠392

  6. irantiran turuka èṉmaṉat tul̤l̤e èḻukiṉṟa cotiye imaiyor cirantaṉiṟ pòliyuṅ kamalacce vaṭiyāy tiruppèruntuṟaiyuṟai civaṉe nirantaākāyam nīrnilam tīkāl āyavai allaiyāy āṅke karantator uruve kal̤ittaṉaṉ uṉṉaik kaṇṇuṟak kaṇṭukòṇ ṭiṉṟe. ⁠393

  7. iṉṟèṉak karul̤i irulkaṭintul̤l̤at tèḻukiṉṟa ñāyiṟe poṉṟu niṉṟaniṉ taṉmai niṉaippaṟa niṉainteṉ nīyalāl piṟitu maṟṟiṉmai cèṉṟucèṉ ṟaṇuvāyt teyntuteyn tòṉṟām tiruppèrun tuṟaiyuṟai civaṉe òṉṟum nīyallai aṉṟiyòṉ ṟillai yāruṉṉai aṟiyakiṟpāre. ⁠394

  8. pārpatam aṇṭam aṉaittumāy mul̤aittup parantator paṭaròl̤ip parappe nīruṟu tīye niṉaivatel ariya niṉmalā niṉṉarul̤ vèl̤l̤ac cīruṟu cintai èḻuntator teṉe tiruppèruntuṟaiyuṟai civaṉe āruṟavu èṉakkiṅ kāraya lul̤l̤ār āṉantam ākkumèṉ coti. ⁠395

  9. cotiyāyt toṉṟum uruvame aruvām òruvaṉe còllutaṟ kariya ātiye naṭuve antame pantam aṟukkum āṉantamā kaṭale tītilā naṉmait tiruvaruṭkuṉṟe tiruppèruntuṟaiyuṟai civaṉe yātunī povator vakaiyèṉakkarul̤āy vantuniṉ iṇaiyaṭi tante. ⁠396

  10. tantatuṉ taṉṉaik kòṇṭatèṉ ṟaṉṉaic caṅkarā ārkòlo caturar antamòṉ ṟillā āṉantam pèṟṟeṉ yātunī pèṟṟatòṉ ṟèṉpāl cintaiye koyil kòṇṭa èmpèrumāṉ tiruppèruntuṟaiyuṟai civaṉe èntaiye īcā uṭaliṭaṅ kòṇṭāy yāṉ itaṟ kilaṉorkaim māṟe. ⁠397

  11. tirucciṟṟampalam

How to use this page
  1. Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.

  2. Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.

  3. Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.

  4. Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.

  5. Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.

  6. Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.

  7. At the end, Previous and Next take you through the list in order.

All tips

Text: Tamil Wikisource: திருவாசகம்/கோயில் திருப்பதிகம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.