யாத்திரைப் பத்து
பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606
தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607
அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608
விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப்படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 609
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610
நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611
பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவங் திறந்த போதே சிவபுரத்துச் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612
சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீ ராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614
திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
pūvār cèṉṉi maṉṉaṉèm puyaṅkap pèrumāṉ ciṟiyomai ovā tul̤l̤am kalantuṇarvāy urukkum vèl̤l̤ak karuṇaiyiṉāl āvā èṉṉap paṭṭaṉpāy āṭpaṭ ṭīrvan tòruppaṭumiṉ povoṅ kālam vantatukāṇ pòyviṭ ṭuṭaiyāṉ kaḻalpukave. 605
pukave veṇṭā pulaṉkal̤ilnīr puyaṅkap pèrumāṉ pūṅkaḻalkal̤ mikave niṉaimiṉ mikkavèllām veṇṭā poka viṭumiṉkal̤ nakave ñālat tul̤pukuntu nāye aṉaiya namaiyāṇṭa takave yuṭaiyāṉ taṉaiccārat tal̤arā tiruppār tāntāme. 606
tāme tamakkuc cuṟṟamum tāme tamakku vitivakaiyum yāmār èmatār pācamār èṉṉamāyam ivaipokak komāṉ paṇṭait tòṇṭaròṭum avaṉtaṉ kuṟippe kuṟikkòṇṭu pomā ṟamaimiṉ pòynīkkip puyaṅkaṉ āl̤vāṉ pòṉṉaṭikke. 607
aṭiyār āṉīr èllīrum akala viṭumiṉ vil̤aiyāṭṭaik kaṭice raṭiye vantaṭaintu kaṭaikkòṇ ṭirumiṉ tirukkuṟippaic cèṭice ruṭalaic cèlanīkkic civalokatte namaivaippāṉ pòṭicer meṉip puyaṅkaṉtaṉ pūvār kaḻaṟke pukaviṭume. 608
viṭumiṉ vèkul̤i veṭkainoy mikavor kālam iṉiyillai uṭaiyāṉ aṭikkīḻp pèruñcāttoṭu uṭaṉpo vataṟke òruppaṭumiṉ aṭaivom nāmpoyc civapurattul̤ aṇiyār katava taṭaiyāme puṭaipaṭ ṭurukip poṟṟuvom puyaṅkaṉ āl̤vāṉ pukaḻkal̤aiye. 609
pukaḻmiṉ tòḻumiṉ pūppuṉaimiṉ puyaṅkaṉ tāl̤e puntivaittiṭṭu ikaḻmiṉ èllā allalaiyum iṉiyor iṭaiyū ṟaṭaiyāme tikaḻuñ cīrār civapurattuc cèṉṟu civaṉtāl̤ vaṇaṅkinām nikaḻum aṭiyār muṉcèṉṟu nèñcam uruki niṟpome. 610
niṟpār niṟkanil lāvulakil nillom iṉinām cèlvome pòṟpāl òppān tirumeṉip puyaṅkaṉ āl̤vāṉ pòṉṉaṭikke niṟpīr èllān tāḻāte niṟkum parice òruppaṭumiṉ piṟpāl niṉṟu peḻkaṇittāṟ pèṟutaṟ kariyaṉ pèrumāṉe. 611
pèrumāṉ perā ṉantattup piriyā tirukkap pèṟṟīrkāl̤ arumā luṟṟup piṉṉainīr ammā aḻuṅki araṟṟāte tirumā maṇicer tirukkatavaṅ tiṟanta pote civapurattuc tirumā laṟiyāt tiruppuyaṅkaṉ tiruttāl̤ cèṉṟu cervome. 612
cerak karutic cintaṉaiyait tirunta vaittuc cintimiṉ poriṟ pòliyum veṟkaṇṇāl̤ paṅkaṉ puyaṅkaṉ arul̤amutam ārap paruki ārāta ārvaṅ kūra aḻuntuvīr porap purimiṉ civaṉkaḻaṟke pòyyiṟ kiṭantu pural̤āte. 613
pural̤vār tòḻuvār pukaḻvārāy iṉṟe vantāl̤ ākātīr marul̤vīr piṉṉai matippārār matiyuṭ kalaṅki mayaṅkuvīr tèrul̤vī rākil itucèymmiṉ civalo kakkoṉ tiruppuyaṅkaṉ arul̤ār pèṟuvār akaliṭatte anto anto antove. 614
tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/யாத்திரைப் பத்து (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-yathirai-pathu.html