அடைக்கலப் பத்து
செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408
வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைக் செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409
பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன் ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413
மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414
மாவடு வகிரன்ன கண்ணிபங்கா நின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம் ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415
பிறிவறியார் அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறின் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417
திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
cèḻukkamalat tiral̤aṉaniṉ cevaṭi cerntamainta paḻuttamaṉat taṭiyaruṭaṉ poyiṉar yāṉ pāviyeṉ puḻukkaṇuṭaip puṉkurampaip pòllākkalvi ñāṉamilā aḻukkumaṉat taṭiyeṉ uṭaiyāy uṉ aṭaikkalame. 408
vèṟuppaṉave cèyyum èṉciṟumaiyainiṉ pèrumaiyiṉāṟ pòṟuppavaṉe arāp pūṇpavaṉe pòṅku kaṅkaicaṭaik cèṟuppavaṉe niṉtiruvarul̤āl èṉ piṟaviyaiver aṟuppavaṉe uṭaiyāyaṭiyeṉuṉ aṭaikkalame. 409
pèrumpèrumāṉèṉ piṟaviyai veraṟuttup pèrumpiccut tarumpèrumāṉ caturappèrumāṉ èṉ maṉattiṉul̤l̤e varumpèrumāṉ malaroṉ nèṭumālaṟiyāmal niṉṟa arumpèrumāṉ uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 410
pòḻikiṉṟa tuṉpap puyalvèl̤l̤attilniṉ kaḻaṟpuaṇaikòṇ ṭiḻikiṉṟa aṉparkal̤ eṟiṉar vāṉyāṉ iṭarkkaṭalvāyc cuḻicèṉṟu mātart tiraipòrak kāmac cuṟavèṟiya aḻikiṉṟaṉaṉ uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 411
curul̤puri kūḻaiyar cūḻaliṟ paṭṭuṉ tiṟammaṟantiṅku irul̤puri yākkaiyilekiṭan tèyttaṉaṉ maittaṭaṅkaṇ vèrul̤purimāṉaṉṉa nokkitaṉ paṅkaviṇṇorpèrumāṉ arul̤puriyāy uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 412
māḻaimaip pāviya kaṇṇiyar vaṉmat tiṭavuṭaintu tāḻiyaip pāvu tayirpol tal̤arnteṉ taṭamalarttāl̤ vāḻiyèp potuvantènnāl̤ vaṇaṅkuvaṉ valaviṉaiyeṉ āḻiyap pāvuṭai yāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 413
miṉkaṇiṉārnuṭaṅkum iṭaiyār vèkul̤ivalaiyil akappaṭṭup puṉkaṇaṉāyppural̤ veṉaip pural̤āmaṟ pukuntarul̤i èṉkaṇile amutūṟit tittittèṉ piḻaikkiraṅkum aṅkaṇaṉe uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 414
māvaṭu vakiraṉṉa kaṇṇipaṅkā niṉ malaraṭikke kūviṭu vāykumpik keyiṭu vāy niṉ kuṟippaṟiyeṉ pāviṭaiyāṭu kuḻalpoṟ karantu paranta ul̤l̤am ākèṭuveṉ uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 415
piṟivaṟiyār aṉparniṉ aruṭpèykaḻal tāl̤iṇaikkīḻ maṟivaṟiyāc cèlvamvantupèṟṟār uṉṉai vantippator nèṟiyaṟi yeṉ niṉṉaiye aṟiyeṉ niṉṉaiye aṟiyum aṟivaṟiṉ uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 416
vaḻaṅkukiṉṟāykkuṉ arul̤ār amutattai vārikkòṇṭu viḻuṅkukiṉṟeṉ vikkiṉeṉ viṉaiyeṉ èṉvitiyiṉmaiyāl taḻaṅkarunteṉaṉṉa taṇṇīr parukattan tuyyak kòl̤l̤āy aḻuṅkukiṉṟeṉ uṭaiyāy aṭiyeṉ uṉ aṭaikkalame. 417
tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/அடைக்கலப் பத்து (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-adaikkala-pathu.html