திருப்பொன்னூசல்
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
மூன்றங்கு இலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேன்தங்கித் தித்தித்து அமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்கள் தாம்நிற்பத் தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337 திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
cīrār paval̤aṅkāl muttaṅ kayiṟāka erārum pòṟpalakai eṟi iṉitamarntu nārāyaṇaṉ aṟiyā nāṇmalarttāl̤ nāyaṭiyeṟku ūrākat tantarul̤um uttara kocamaṅkai ārā amutiṉ arul̤tā l̤iṇaipāṭip porārveṟ kaṇmaṭavīr pòṉṉūcal āṭāmo. 329
mūṉṟaṅku ilaṅku nayaṉattaṉ mūvāta vāṉtaṅku tevarkal̤uṅ kāṇā malaraṭikal̤ teṉtaṅkit tittittu amutūṟit tāṉtèl̤intaṅku ūṉtaṅki niṉṟurukkum uttara kocamaṅkaik koṉtaṅku iṭaimarutu pāṭik kulamaññai poṉṟaṅku aṉanaṭaiyīr pòṉṉūcal āṭāmo. 330
muṉṉīṟum ātiyu millāṉ muṉivarkuḻām paṉṉūṟu koṭi yimaiyorkal̤ tāmniṟpat taṉṉīṟu èṉakkarul̤it taṉkaruṇai vèl̤l̤attu maṉṉūṟa maṉṉumaṇi yuttara kocamaṅkai miṉṉeṟu māṭa viyaṉmā l̤ikaipāṭip pòṉṉeṟu pūṇmulaiyīr pòṉṉūcal āṭāmo. 331
nañcamar kaṇṭattaṉ aṇṭat tavarnātaṉ mañcutoy māṭamaṇi uttara kocamaṅkai añcòlāl̤ taṉṉoṭuṅ kūṭi aṭiyavarkal̤ nèñcul̤e niṉṟamutam ūṟik karuṇaicèytu tuñcal piṟappaṟuppāṉ tūya pukaḻpāṭip puñcamār vèl̤val̤aiyīr pòṉṉūcal āṭāmo. 332
āṇo aliyo arivaiyo èṉṟiruvar kāṇāk kaṭavul̤ karuṇaiyiṉāl tevarkuḻām nāṇāme uyyaāṭ kòṇṭarul̤i nañcutaṉai ūṇāka uṇṭarul̤um uttara kocamaṅkaik koṇār piṟaiccèṉṉik kūttaṉ kuṇamparavip pūṇār vaṉamulaiyīr pòṉṉūcal āṭāmo. 333
mātāṭu pākattaṉ uttara kocamaṅkait tātāṭu kòṉṟaic caṭaiyāṉ aṭiyārul̤ kotāṭṭi nāyeṉai āṭkòṇṭèṉ tòlpiṟavit tītoṭā vaṇṇan tikaḻap piṟappaṟuppāṉ kātāṭu kuṇṭalaṅkal̤ pāṭik kacintaṉpāl potāṭu pūṇmulaiyīr pòṉṉūcal āṭāmo. 334
uṉṉaṟ kariyatiru vuttara kocamaṅkai maṉṉip pòlintirunta māmaṟaiyoṉ taṉpukaḻe paṉṉip paṇintiṟaiñcap pāvaṅkal̤ paṟṟaṟuppāṉ aṉṉattiṉ meleṟi āṭumaṇi mayilpol èṉṉattaṉ èṉṉaiyum āṭkòṇṭāṉ èḻilpāṭip pòṉṉòtta pūṇmulaiyīr pòṉṉūcal āṭāmo. 335
kola varaikkuṭumi vantu kuvalayattuc cāla amutuṇṭu tāḻkaṭaliṉ mītèḻuntu ñāla mikapparimeṟ kòṇṭu namaiyāṇṭāṉ cīlan tikaḻun tiruvuttara kocamaṅkai māluk kariyāṉai vāyāra nāmpāṭip pūlit takaṅkuḻaintu pòṉṉūcal āṭāmo. 336
tèṅkulavu colait tiruuttara kocamaṅkai taṅkulavu cotit taṉiyuruvam vantarul̤i èṅkal̤ piṟappaṟuttiṭ ṭèntaramum āṭkòl̤vāṉ paṅkulavu kotaiyun tāṉum paṇikòṇṭa kòṅkulavu kòṉṟaic caṭaiyāṉ kuṇamparavip pòṅkulavu pūṇmulaiyīr pòṉṉūcal āṭāmo. 337 tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/திருப்பொன்னூசல் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-thirupponnoosal.html