திருப்பொற் சுண்ணம்
- திருப்பொற் சுண்ணம்
ஆனந்த மனோலயம் (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8
திருப்பொற் சுண்ணம்/உரை 1-8
பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 16
திருப்பொற் சுண்ணம்/உரை 9-16
சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன்சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 24
திருப்பொற் சுண்ணம்/உரை 17-24
காசணி மின்கள் உலக்கையெல்லாம் காம்பணி மின்கள் கறையுரலை நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாசவினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 32
திருப்பொற் சுண்ணம்/உரை 25-32
அறுகெடுப்பார் அயனும் அரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 40
திருப்பொற் சுண்ணம்/உரை 33-40
உலக்கை பலவோச்சு வார்பெரியர் உலகமெ லாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார் காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடிந்துநாமே. 48
திருப்பொற் சுண்ணம்/உரை 41-48
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடக மெல்லடி யார்க்கு மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக் காடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 56
திருப்பொற் சுண்ணம்/உரை 49-56
வாள்தடங் கண்மட மங்கைநல்லீர் வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 64
திருப்பொற் சுண்ணம்/உரை 57-64
வையகம் எல்லாம் உரலதாக மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச் செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 72
திருப்பொற் சுண்ணம்/உரை 65-72
முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 80
திருப்பொற் சுண்ணம்/உரை 73-80
மாடு நகைவாள் நிலாவெறிப்ப வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடி சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 88
திருப்பொற் சுண்ணம்/உரை 81-88
மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 96
திருப்பொற் சுண்ணம்/உரை 89-96
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுதெங்களப்பன் எம்பெருமான் இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 104
திருப்பொற் சுண்ணம்/உரை 97-104
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்குங் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச்சுண்ணம் இடித்துநாமே. 112
திருப்பொற் சுண்ணம்/உரை 105-112
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர் பாடிப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 120
திருப்பொற் சுண்ணம்/உரை 113-120
ஆவகை நாமும் வந்தன்பர்தம்மோ டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர் கனாவிலுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன் செய்சுண்ணம் இடித்துநாமே. 128
திருப்பொற் சுண்ணம்/உரை 121-128
தேனக மாமலர்க் கொன்றைபாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 136
திருப்பொற் சுண்ணம்/உரை 129-136
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடி கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக்காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 144
திருப்பொற் சுண்ணம்/உரை 137-144
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும்பாடி மதியம்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி ஈசற்குச்சுண்ணம் இடித்துநாமே. 152
திருப்பொற் சுண்ணம்/உரை 145-152
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய்இருள் ஆயினார்க்குத் துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயினார்க்கு ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 160
திருப்பொற் சுண்ணம்/உரை 153-160
Roman transliteration (IAST)
Automatic transliteration.
- tiruppòṟ cuṇṇam
āṉanta maṉolayam (tillaiyil arul̤iyatu - aṟucīr āciriya viruttam)
muttunal tāmampū mālaitūkki mul̤aikkuṭan tūpamnal tīpamvaimmiṉ cattiyum comiyum pārmakal̤um nāmaka l̤oṭupal lāṇṭicaimiṉ cittiyuṅ kauriyum pārppatiyum kaṅkaiyum vantu kavarikòṇmiṉ attaṉ aiyāṟaṉ ammāṉaippāṭi āṭappòṟ cuṇṇam iṭittunāme. 8
tiruppòṟ cuṇṇam/urai 1-8
pūviyal vārcaṭai èmpirāṟkup pòṟṟiruc cuṇṇam iṭikkaveṇṭum māviṉ vaṭuvaki raṉṉakaṇṇīr vammiṉkal̤ vantuṭaṉ pāṭumiṉkal̤ kūvumiṉ tòṇṭar puṟanilāme kuṉimiṉ tòḻumiṉèṅ koṉèṅkūttaṉ teviyun tāṉumvan tèmmaiyāl̤ac cèmpòṉcèy cuṇṇam iṭittunāme. 16
tiruppòṟ cuṇṇam/urai 9-16
cuntara nīṟaṇin tummèḻukit tūyapòṉcinti nitiparappi intiraṉ kaṟpakam nāṭṭiyèṅkum èḻiṟcuṭar vaittuk kòṭiyèṭumiṉ antarar koṉayaṉ taṉpèrumāṉ āḻiyāṉ nātaṉnal velaṉtātai èntaram āl̤umai yāl̤kòḻunaṟ keynta pòṟcuṇṇam iṭittunāme. 24
tiruppòṟ cuṇṇam/urai 17-24
kācaṇi miṉkal̤ ulakkaiyèllām kāmpaṇi miṉkal̤ kaṟaiyuralai necamuṭaiya aṭiyavarkal̤ niṉṟu nilāvuka èṉṟuvāḻttit tecamèllām pukaḻn tāṭuṅ kaccit tiruvekam paṉcèmpòṟ koyilpāṭip pācaviṉaiyaip paṟittu niṉṟu pāṭip pòṟcuṇṇam iṭittunāme. 32
tiruppòṟ cuṇṇam/urai 25-32
aṟukèṭuppār ayaṉum ariyum aṉṟimaṟ ṟintira ṉoṭamarar naṟumuṟu tevar kaṇaṅkal̤èllām nammiṟpiṉ palla tèṭukkavòṭṭom cèṟivuṭai mummatil èytavilli tiruvekam paṉcèmpòṟ koyilpāṭi muṟuvaṟcèv vāyiṉīr mukkaṇappaṟ kāṭappòṟcuṇṇam iṭittunāme. 40
tiruppòṟ cuṇṇam/urai 33-40
ulakkai palavoccu vārpèriyar ulakamè lāmural potātèṉṟe kalakka aṭiyavar vantuniṉṟār kāṇa ulakaṅkal̤ potātèṉṟe nalakka aṭiyomai āṇṭukòṇṭu nāṇmalarp pātaṅkal̤ cūṭattanta malaikku marukaṉaip pāṭippāṭi makiḻntu pòṟcuṇṇam iṭintunāme. 48
tiruppòṟ cuṇṇam/urai 41-48
cūṭakan tol̤val̤ai ārppa ārppat tòṇṭar kuḻāmèḻun tārppa ārppa nāṭavar nantammai ārppa ārppa nāmum avartammai ārppa ārppap pāṭaka mèllaṭi yārkku maṅkai paṅkiṉaṉ èṅkal̤ parāparaṉukku āṭaka māmalai aṉṉakovuk kāṭap pòṟcuṇṇam iṭittunāme. 56
tiruppòṟ cuṇṇam/urai 49-56
vāl̤taṭaṅ kaṇmaṭa maṅkainallīr varival̤ai ārppavaṇ kòṅkaipòṅkat tol̤tiru muṇṭan tutaintilaṅkac cottèmpi rāṉèṉṟu còlliccòlli nāṭkòṇṭa nāṇmalarp pātaṅkāṭṭi nāyiṟ kaṭaippaṭṭa nammaiyimmai āṭkòṇṭa vaṇṇaṅkal̤ pāṭippāṭi āṭap pòṟcuṇṇam iṭittunāme. 64
tiruppòṟ cuṇṇam/urai 57-64
vaiyakam èllām uralatāka māmeru èṉṉum ulakkai nāṭṭi mèyyèṉum mañcal̤ niṟaiya aṭṭi metaku tèṉṉaṉ pèruntuṟaiyāṉ cèyya tiruvaṭi pāṭippāṭic cèmpòṉ ulakkai valakkaipaṟṟi aiyaṉ aṇitillai vāṇaṉukke āṭappòṟ cuṇṇam iṭittunāme. 72
tiruppòṟ cuṇṇam/urai 65-72
muttaṇi kòṅkaikal̤ āṭaāṭa mòykuḻal vaṇṭiṉam āṭaāṭac cittañ civaṉòṭum āṭaāṭac cèṅkayaṟ kaṇpaṉi āṭaāṭap pittèm pirāṉòṭum āṭaāṭap piṟavi piṟaròṭum āṭaāṭa attaṉ karuṇaiyò ṭāṭaāṭa āṭappòṟcuṇṇam iṭittunāme. 80
tiruppòṟ cuṇṇam/urai 73-80
māṭu nakaivāl̤ nilāvèṟippa vāytiṟan tampava l̤antuṭippap pāṭumiṉ nantammai āṇṭavāṟum paṇikòṇṭa vaṇṇamum pāṭippāṭit teṭumiṉ èmpèru māṉaitteṭi cittaṅ kal̤ippat tikaittutteṟi āṭumiṉ ampalat tāṭiṉāṉuk kāṭappòṟcuṇṇam iṭittunāme. 88
tiruppòṟ cuṇṇam/urai 81-88
maiyamar kaṇṭaṉai vāṉanāṭar maruntiṉai māṇikkak kūttaṉtaṉṉai aiyaṉai aiyarpi rāṉainammai akappaṭut tāṭkòṇ ṭarumaikāṭṭum pòyyar tam pòyyaṉai mèyyar mèyyaip potarik kaṇṇiṉaip pòṟṟòṭittol̤ paiyara valkul maṭantainallīr pāṭip pòṟcuṇṇam iṭittunāme. 96
tiruppòṟ cuṇṇam/urai 89-96
miṉṉiṭaic cèntuvar vāykkaruṅkaṇ vèṇṇakaip paṇṇamar mèṉmòḻiyīr èṉṉuṭai āramutèṅkal̤appaṉ èmpèrumāṉ ima vāṉmakaṭkut taṉṉuṭaik kel̤vaṉ makaṉtakappaṉ tamaiyaṉèm aiyaṉ tāl̤kal̤ pāṭip pòṉṉuṭaip pūṇmulai maṅkainallīr pòṟṟiruc cuṇṇam iṭittunāme. 104
tiruppòṟ cuṇṇam/urai 97-104
caṅkam araṟṟac cilampòlippat tāḻkuḻal cūḻtaru mālaiyāṭac cèṅkaṉi vāyita ḻuntuṭippac ceyiḻai yīrciva lokampāṭik kaṅkai iraippa arāiraikkuṅ kaṟṟaic caṭaimuṭi yāṉkaḻaṟke pòṅkiya kātaliṟ kòṅkai pòṅkap pòṟṟiruccuṇṇam iṭittunāme. 112
tiruppòṟ cuṇṇam/urai 105-112
ñāṉak karumpiṉ tèl̤ivaip pākai nāṭaṟ kariya nalattai nantāt teṉaip paḻaccuvai āyiṉāṉaic cittam pukuntutit tikkavalla koṉaip piṟappaṟut tāṇṭukòṇṭa kūttaṉai nāttaḻum peṟavāḻttip pāṉal taṭaṅkaṇ maṭantainallīr pāṭippòṟcuṇṇam iṭittunāme. 120
tiruppòṟ cuṇṇam/urai 113-120
āvakai nāmum vantaṉpartammo ṭāṭcèyyum vaṇṇaṅkal̤ pāṭiviṇmel tevar kaṉāviluṅ kaṇṭaṟiyāc cèmmalarp pātaṅkal̤ kāṭṭuñ cèlvac cevakam entiya vèlkòṭiyāṉ civapèru māṉpurañ cèṟṟakòṟṟac cevakaṉ nāmaṅkal̤ pāṭippāṭic cèmpòṉ cèycuṇṇam iṭittunāme. 128
tiruppòṟ cuṇṇam/urai 121-128
teṉaka māmalark kòṉṟaipāṭic civapuram pāṭit tiruccaṭaimel vāṉaka māmatip pil̤l̤aipāṭi mālviṭai pāṭi valakkaiyentum ūṉaka māmaḻuc cūlampāṭi umparum imparum uyyaaṉṟu poṉaka mākanañ cuṇṭalpāṭip pòṟṟiruc cuṇṇam iṭittunāme. 136
tiruppòṟ cuṇṇam/urai 129-136
ayaṉtalai kòṇṭucèṇ ṭāṭalpāṭi arukkaṉ èyiṟu paṟittalpāṭi kayantaṉaik kòṉṟuri porttalpāṭik kālaṉaikkālāl utaittalpāṭi iyaintaṉa muppuram èytal pāṭi eḻai aṭiyomai āṇṭukòṇṭa nayantaṉaip pāṭiniṉ ṟāṭiyāṭi nātaṟkuc cuṇṇam iṭittunāme. 144
tiruppòṟ cuṇṇam/urai 137-144
vaṭṭamalarkkòṉṟai mālaipāṭi mattamumpāṭi matiyampāṭic ciṭṭarkal̤ vāḻuntèṉ tillaipāṭic ciṟṟam palattèṅkal̤ cèlvampāṭik kaṭṭiya mācuṇak kaccaipāṭik kaṅkaṇam pāṭik kavittakaimmel iṭṭuniṉ ṟāṭum aravampāṭi īcaṟkuccuṇṇam iṭittunāme. 152
tiruppòṟ cuṇṇam/urai 145-152
vetamum vel̤viyum āyiṉārkku mèymmaiyum pòymmaiyum āyiṉārkkuc cotiyu māyirul̤ āyiṉārkkut tuṉpamumāy iṉpam āyiṉārkkup pātiyu māymuṟṟum āyiṉārkkup pantamu māyvīṭum āyiṉārkku ātiyum antamum āyiṉārkku āṭappòṟcuṇṇam iṭittunāme. 160
tiruppòṟ cuṇṇam/urai 153-160
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: திருவாசகம்/திருப்பொற் சுண்ணம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-thiruppor-sunnam.html