கோளறு பதிகம்
- கோளறுl பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
- kol̤aṟul patikam
tiruñāṉacampantar arul̤iya tiruppatikam veyuṟu tol̤i paṅkaṉviṭamuṇṭa kaṇṭaṉ mikanalla vīṇai taṭavi mācaṟu tiṅkal̤ kaṅkai muṭimel aṇintèṉ ul̤ame pukunta ataṉāl ñāyiṟutiṅkal̤ cèvvāy putaṉ viyāḻaṉ vèl̤l̤i caṉipām piraṇṭu muṭaṉe ācaṟu nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. èṉpòṭu kòmpòṭāmai ivaimārpilaṅka èruteṟi yeḻai yuṭaṉe pòṉpòti matta mālai puṉalcūṭi vantu èṉ ul̤ame pukunta ataṉāl òṉpatòṭu òṉṟòṭu eḻu patiṉèṭṭò ṭuāṟum uṭaṉāya nāl̤kal̤ avaitām aṉpòṭu nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. uruval̤ar paval̤ameṉi òl̤inī ṟaṇintu umaiyoṭum vèl̤l̤aiviṭaimel murukalar kòṉṟai tiṅkal̤ muṭimelaṇintu èṉ ul̤ame pukunta ataṉāl tirumakal̤ kalaiya tūrti cèyamātu pūmi ticai tèyvamāṉa palavum aṟanèṟi nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. matinutal maṅkaiyoṭu vaṭapāl iruntu maṟaiotum èṅkal̤ paramaṉ natiyòṭu kòṉṟai mālai muṭimel aṇintuèṉ ul̤ame pukunta ataṉāl kòtiyaṟu kālaṉaṅki namaṉòṭu tūtar kòṭu noykal̤ āṉa palavum atikuṇam nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. nañcaṇi kaṇṭaṉ èntai maṭavāl̤ taṉoṭum viṭai eṟum naṅkal̤ paramaṉ tuñcirul̤ vaṉṉi kòṉṟai muṭimel aṇintuèṉ ul̤ame pukunta ataṉāl vèñciṉa avuṇa roṭum urumiṭiyu miṉṉum mikaiyāṉa pūtam avaiyum añciṭum nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. vāl̤vari atal̤a tāṭai varikovaṇattar maṭavāl̤ taṉoṭumuṭaṉāy nāṇmalar vaṉṉi kòṉṟai naticūṭi vantèṉ ul̤ame pukunta ataṉāl kol̤ari uḻuvaiyoṭu kòlaiyāṉaikeḻal kòṭu nākamoṭu karaṭi āl̤ari nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. cèppil̤a mulainaṉ maṅkai òru pākamāka viṭaiyeṟu cèlvaṉ aṭaivāṉ òppil̤a matiyum appum muṭimel aṇintèṉ ul̤ame pukunta ataṉāl vèppòṭu kul̤irum vātam mikaiyāṉa pittum viṉaiyāṉa vantu naliyā appaṭi nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. vel̤paṭa viḻicèytaṉṟu viṭaimel iruntu maṭavāl̤ taṉoṭum uṭaṉāy vāṉmati vaṉṉi kòṉṟai malar cūṭi vantèṉ ul̤ame pukunta ataṉāl eḻkaṭal cūḻilaṅkai araiyaṉ taṉṉoṭum iṭarāṉa vantu naliyā āḻkaṭal nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. pala pala veṭamākum paraṉ nāri pākaṉ pacuveṟum èṅkal̤ paramaṉ calamakal̤oṭu èrukku muṭimel aṇintèṉ ul̤ame pukunta ataṉāl malarmicai yoṉum mālum maṟaiyoṭu tevar varukāla māṉa palavum alaikaṭal meru nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. kòttalar kuḻali yoṭu vicaiyaṟku nalku kuṇamāy veṭa vikirtaṉ mattamum matiyum nākam muṭimel aṇintu èṉ ul̤ame pukunta ataṉāl puttaròṭu amaṇai vatil aḻivikkum aṇṇal tirunīṟu cèmmai tiṭame attaku nalla nalla avai nalla nalla aṭiyār avarkku mikave. teṉamar pòḻil kòl̤ ālai vil̤ai cènnèl tuṉṉi val̤arcèmpòṉ èṅkum nikaḻa nāṉmukaṉ ātiyāya piramā purattu maṟaiñāṉa muṉivaṉ tāṉuṟu kol̤um nāl̤um aṭiyārai vantu naliyāta vaṇṇam urai cèy āṉacòl mālai otum aṭiyārkal̤ vāṉil aracāl̤var āṇai namate. tirucciṟṟampalam
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: கோளறு பதிகம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-kolaru-pathigam.html