நமச்சிவாயத்திருப்பதிகம்
திருஞானசம்பந்தர் பாடியது மூன்றாந் திருமுறை பண்- நட்டபாடை (அஞ்செழுத்துண்மை)
- பாடல்: 01 (காதலாகி)
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னாம நமச்சி வாயவே. (01)
- பாடல்: 02 (நம்புவார்)
நம்பு வார்நமர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்ப னாம நமச்சி வாயவே. (02)
- பாடல்: 03 (நெக்கு)
நெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந் தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராய்த்தகு விப்பது நக்க னாம நமச்சி வாயவே. (03)
- பாடல்: 04 (இயமன்)
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தானினை வார்க்கினி யானெற்றி நயன னாம நமச்சி வாயவே. (04)
- பாடல்: 05 (கொல்வாரேனுங்)
கொல்வா ரேனுங் கணம்பல நன்மைகள் இல்லாரேனு மியம்புவ ராயிடின் ்:எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாம நமச்சி வாயவே. (05)
- பாடல்: 06 (மந்தரம்மன)
மந்த ரம்மன பாவங்கண் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்தி நாம நமச்சி வாயவே. (06)
- பாடல்: 07 (நரகமேழ்)
நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயின ராயினு ருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரத னாம நமச்சி வாயவே. (07)
- பாடல்:08 (இலங்கை)
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும் மலங்கி வாய்மொழி செயதவ னுய்வகை நலங்கொ ணாம நமச்சி வாயவே. (08)
- பாடல்:09 (போதன்)
போதன் போதன கண்ணனு மண்ணறன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகிய லந்தவர் ஓது நாம நமச்சி வாயவே. (09)
- பாடல்:10 (கஞ்சி)
கஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள் வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய் நஞ்சுள் கண்ட னமச்சி வாயவே. (10)
- பாடல்:11 (நந்தி)
நந்தி நாம நமச்சிவா யவெனும் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெல்லாம் பந்த பாச மறுக்கவல் லார்களே. (11) திருஞானசம்பந்தப்பெருமான் பாடிய நமச்சிவாயத்திருப்பதிகம் முற்றும்
Roman transliteration (IAST)
Automatic transliteration.
tiruñāṉacampantar pāṭiyatu mūṉṟān tirumuṟai paṇ- naṭṭapāṭai (añcèḻuttuṇmai)
- pāṭal: 01 (kātalāki)
kāta lākik kacintukaṇ ṇīrmalki otuvārtamai naṉṉèṟik kuyppatu veta nāṉkiṉu mèyppòru l̤āvatu nāta ṉāma namacci vāyave. (01)
- pāṭal: 02 (nampuvār)
nampu vārnamar nāvi ṉaviṟṟiṉāl vampu nāṇmalar vārmatu vòppatu cèmpò ṉārtila kammula kukkèlām nampa ṉāma namacci vāyave. (02)
- pāṭal: 03 (nèkku)
nèkku l̤ārva mikappèru kiniṉain takku mālaikò ṭaṅkaiyi lèṇṇuvār takka vāṉava rāyttaku vippatu nakka ṉāma namacci vāyave. (03)
- pāṭal: 04 (iyamaṉ)
iyamaṉ ṟūtaru mañcuva riṉcòlāl nayamvan totaval lārtamai naṇṇiṉāl niyaman tāṉiṉai vārkkiṉi yāṉèṟṟi nayaṉa ṉāma namacci vāyave. (04)
- pāṭal: 05 (kòlvāreṉuṅ)
kòlvā reṉuṅ kaṇampala naṉmaikal̤ illāreṉu miyampuva rāyiṭiṉ :èllāt tīṅkaiyu nīṅkuva rèṉparāl nallār nāma namacci vāyave. (05)
- pāṭal: 06 (mantarammaṉa)
manta rammaṉa pāvaṅkaṇ meviya panta ṉaiyavar tāmum pakarvarel cintum valviṉai cèlvamu malkumāl nanti nāma namacci vāyave. (06)
- pāṭal: 07 (narakameḻ)
naraka meḻpuka nāṭiṉa rāyiṉum uraicèy vāyiṉa rāyiṉu ruttirar viravi yepuku vittiṭu mèṉparāl varata ṉāma namacci vāyave. (07)
- pāṭal:08 (ilaṅkai)
ilaṅkai maṉṉa ṉèṭutta vaṭukkaṉmel talaṅkòl̤ kālviral caṅkara ṉūṉṟalum malaṅki vāymòḻi cèyatava ṉuyvakai nalaṅkò ṇāma namacci vāyave. (08)
- pāṭal:09 (potaṉ)
potaṉ potaṉa kaṇṇaṉu maṇṇaṟaṉ pātan tāṉmuṭi neṭiya paṇparāy yātuṅ kāṇpari tākiya lantavar otu nāma namacci vāyave. (09)
- pāṭal:10 (kañci)
kañci maṇṭaiyar kaiyiṉuṇ kaiyarkal̤ vèñcòṉ miṇṭar viravila rèṉparāl viñcai yaṇṭarkal̤ veṇṭa vamutucèy nañcul̤ kaṇṭa ṉamacci vāyave. (10)
- pāṭal:11 (nanti)
nanti nāma namaccivā yavèṉum cantai yāṟṟamiḻ ñāṉacam pantaṉcòl cintai yāṉmakiḻn tettaval lārèllām panta pāca maṟukkaval lārkal̤e. (11) tiruñāṉacampantappèrumāṉ pāṭiya namaccivāyattiruppatikam muṟṟum
How to use this page
Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.
Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.
Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.
Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.
Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.
Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.
At the end, Previous and Next take you through the list in order.
Text: Tamil Wikisource: நமச்சிவாயத்திருப்பதிகம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.
Sanatan Bhakt · sanatanbhakt.com/prayers/prayer/ta-namachivaya-thiruppathigam.html