பஞ்சாக்கரத்திருப்பதிகம்

Auto-scrollSpeed 3

Touch the screen or press any key to pause.

Reading settings

Text size
Show
Layout (wide screens)
Line spacing
  1. திருஞானசம்பந்தர் மூன்றாந்திருமுறை பண்: காந்தாரம்

  2. பாடல்: 01 (துஞ்சலுந்)

    துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமி னாடோறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்ச வுதைத்தன வஞ்செ ழுத்துமே. (01)

  3. பாடல்: 02 (மந்திர)

    மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுண் மந்திர மஞ்செழுத்துமே. (02)

  4. பாடல்: 03 (ஊனில்)

    ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன வஞ்செழுத் துமே. (03)

  5. பாடல்: 04 (நல்லவர்)

    நல்லவர் தீயரெ னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத் தல்லல் கெடுப்பன வஞ்செ ழுத்துமே. (04)

  6. பாடல்: 05 (கொங்கலர்)

    கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில் தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை அங்கையி லைவிர லஞ்செழுத்துமே. (05)

  7. பாடல்: 06 (தும்மல்)

    தும்மலிரும றொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே. (06)

  8. பாடல்: 07 (வீடுபிறப்பை)

    வீடு பிறப்பை யறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாடொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி யுகப்பன வஞ்செ ழுத்துமே. (07)

  9. பாடல்: 08 (வண்டமர்)

    வண்டம ரோதி மடந்தை பேணின பண்டை யிராவணன் பாடி யுய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்ட மளிப்பன வஞ்செழுத்துமே. (08)

  10. பாடல்: 09 (கார்வணன்)

    கார்வண னான்முகன் காணுதற் கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வண மாவன வஞ்செ ழுத்துமே. (09)

  11. பாடல்: 10 (புத்தர்)

    புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்க டெளிந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன வஞ்செ ழுத்துமே. (10)

  12. பாடல்: 11 (நற்றமிழ்)

    நற்றமிழ் ஞானசம் பந்த னான்மறை கற்றவன் காழியர் மன்ன னுன்னிய அற்றமின் மாலையீ ரைந்து மஞ்செழுத் துற்றன வல்லவ ரும்ப ராவரே. (11) திருஞானசம்பந்தர் பாடிய பஞ்சாக்கரத்திருப்பதிகம் முடிந்தது

Roman transliteration (IAST)

Automatic transliteration.

  1. tiruñāṉacampantar mūṉṟāntirumuṟai paṇ: kāntāram

  2. pāṭal: 01 (tuñcalun)

    tuñcalun tuñcali lāta poḻtiṉum nèñcaka naintu niṉaimi ṉāṭoṟum vañcaka maṟṟaṭi vāḻtta vantakūṟ ṟañca vutaittaṉa vañcè ḻuttume. (01)

  3. pāṭal: 02 (mantira)

    mantira nāṉmaṟai yāki vāṉavar cintaiyu ṇiṉṟavar tammai yāl̤vaṉa cèntaḻa lompiya cèmmai vetiyark kantiyuṇ mantira mañcèḻuttume. (02)

  4. pāṭal: 03 (ūṉil)

    ūṉi luyirppai yòṭukki yòṇcuṭar ñāṉa vil̤akkiṉai yeṟṟi naṉpulat teṉai vaḻitiṟan tettu vārkkiṭar āṉa kèṭuppaṉa vañcèḻut tume. (03)

  5. pāṭal: 04 (nallavar)

    nallavar tīyarè ṉātu nacciṉar cèllal kèṭacciva mutti kāṭṭuva kòlla namaṉṟamar kòṇṭu pomiṭat tallal kèṭuppaṉa vañcè ḻuttume. (04)

  6. pāṭal: 05 (kòṅkalar)

    kòṅkalar vaṉmataṉ vāl̤i yaintakat taṅkul̤a pūtamu mañca vaimpòḻil taṅkara viṉpaṭa mañcun tammuṭai aṅkaiyi laivira lañcèḻuttume. (05)

  7. pāṭal: 06 (tummal)

    tummaliruma ṟòṭarnta poḻtiṉum vèmmai narakam vil̤ainta poḻtiṉum immai viṉaiyaṭart tèytum poḻtiṉum ammaiyi ṉuntuṇai yañcè ḻuttume. (06)

  8. pāṭal: 07 (vīṭupiṟappai)

    vīṭu piṟappai yaṟuttu mècciṉar pīṭai kèṭuppaṉa piṉṉai nāṭòṟum māṭu kòṭuppaṉa maṉṉu mānaṭam āṭi yukappaṉa vañcè ḻuttume. (07)

  9. pāṭal: 08 (vaṇṭamar)

    vaṇṭama roti maṭantai peṇiṉa paṇṭai yirāvaṇaṉ pāṭi yuyntaṉa tòṇṭarkal̤ kòṇṭu tutitta piṉṉavark kaṇṭa mal̤ippaṉa vañcèḻuttume. (08)

  10. pāṭal: 09 (kārvaṇaṉ)

    kārvaṇa ṉāṉmukaṉ kāṇutaṟ kòṇāc cīrvaṇac cevaṭi cèvvi nāṭòṟum pervaṇam pecip pitaṟṟum pittarkaṭ kārvaṇa māvaṉa vañcè ḻuttume. (09)

  11. pāṭal: 10 (puttar)

    puttar camaṇkaḻuk kaiyar pòykòl̤āc cittat tavarka ṭèl̤intu teṟiṉa vittaka nīṟaṇi vārvi ṉaippakaik kattira māvaṉa vañcè ḻuttume. (10)

  12. pāṭal: 11 (naṟṟamiḻ)

    naṟṟamiḻ ñāṉacam panta ṉāṉmaṟai kaṟṟavaṉ kāḻiyar maṉṉa ṉuṉṉiya aṟṟamiṉ mālaiyī raintu mañcèḻut tuṟṟaṉa vallava rumpa rāvare. (11) tiruñāṉacampantar pāṭiya pañcākkarattiruppatikam muṭintatu

How to use this page
  1. Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.

  2. Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.

  3. Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.

  4. Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.

  5. Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.

  6. Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.

  7. At the end, Previous and Next take you through the list in order.

All tips

Text: Tamil Wikisource: பஞ்சாக்கரத்திருப்பதிகம் (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.