திருவெழுகூற்றிருக்கை

Auto-scrollSpeed 3

Touch the screen or press any key to pause.

Reading settings

Text size
Show
Layout (wide screens)
Line spacing
  1. முதற்றிருமுறை-சிவனுருவம்

    ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை // 05 // ஓரா னீழ லொண்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை இருநதி யரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் // 10 // நாற்கான் மான்மறி யைந்தலை யரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு விருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானில மஞ்சக் // 15 // கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை ஐம்புல னாலா மந்தக் கரணம் முக்குண மிருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்நதுமுப் பொழுது குறைமுடித்து // 20 // நான்மறை யோதி யைவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை இகலி யமைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை // 30 // வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை // 35 // ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும் ஊழியு முணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமு மைந்தமர் கல்வியும் மறைமுத னான்கும் // 40 // முன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையி னொருமையு மொருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணிய னறியும் // 45 // அனைய தன்மையை யாதலி னின்னை நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. திருச்சிற்றம்பலம்

Roman transliteration (IAST)

Automatic transliteration.

  1. mutaṟṟirumuṟai-civaṉuruvam

    oruru vāyiṉai māṉāṅ kārat tīriyal pāyòru viṇmutal pūtalam òṉṟiya virucuṭa rumparkal̤ piṟavum paṭaittal̤it taḻippamum mūrttika l̤āyiṉai iruvaro ṭòruva ṉāki niṉṟaṉai // 05 // orā ṉīḻa lòṇkaḻa liraṇṭum muppòḻu tettiya nālvark kòl̤inèṟi kāṭṭiṉai nāṭṭamūṉ ṟākak koṭṭiṉai irunati yaravamo ṭòrumati cūṭiṉai òrutā l̤īrayiṉ mūvilaic cūlam // 10 // nāṟkāṉ māṉmaṟi yaintalai yaravam entiṉai kāynta nālvāya mummatat tirukoṭ ṭòrukari yīṭaḻit turittaṉai òrutaṉu virukāl val̤aiya vāṅki muppurat toṭu nāṉila mañcak // 15 // kòṉṟu talattuṟa vavuṇarai yaṟuttaṉai aimpula ṉālā mantak karaṇam mukkuṇa miruval̤i yòruṅkiya vāṉor etta niṉṟaṉai yòruṅkiya maṉatto ṭirupiṟap pornatumup pòḻutu kuṟaimuṭittu // 20 // nāṉmaṟai yoti yaivakai vel̤vi amaittā ṟaṅka mutalèḻut toti varaṉmuṟai payiṉṟèḻu vāṉṟaṉai val̤arkkum piramapuram peṇiṉai aṟupata muralum veṇupuram virumpiṉai ikali yamaintuṇar pukali yamarntaṉai pòṅkunāṟ kaṭalcūḻ vèṅkuru vil̤aṅkiṉai pāṇimū vulakum putaiyameṉ mitanta toṇipurat tuṟaintaṉai tòlaiyā viruniti vāynta pūntarā yeyntaṉai // 30 // varapura mèṉṟuṇar cirapurat tuṟaintaṉai òrumalai yèṭutta virutiṟa larakkaṉ viṟalkèṭut tarul̤iṉai puṟavam purintaṉai munnīrt tuyiṉṟo ṉāṉmuka ṉaṟiyāp paṇpòṭu niṉṟaṉai caṇpai yamarntaṉai // 35 // aiyuṟu mamaṇaru maṟuvakait terarum ūḻiyu muṇarāk kāḻi yamarntaṉai èccaṉe ḻicaiyoṉ kòccaiyai mècciṉai āṟu patamu maintamar kalviyum maṟaimuta ṉāṉkum // 40 // muṉṟu kālamun toṉṟa niṉṟaṉai irumaiyi ṉòrumaiyu mòrumaiyiṉ pèrumaiyum maṟuvilā maṟaiyor kaḻumala mutupatik kavuṇiyaṉ kaṭṭurai kaḻumala mutupatik kavuṇiya ṉaṟiyum // 45 // aṉaiya taṉmaiyai yātali ṉiṉṉai niṉaiya vallava rillainī ṇilatte. tirucciṟṟampalam

How to use this page
  1. Tap Kirtan for large text that keeps the screen awake. Press Start to scroll while you sing; touch the screen to pause.

  2. Tap Aa to change the text size and line spacing, or to show both, lyrics only or translation only. Your choice is remembered.

  3. Under Read in, pick a script to read the same text in Devanagari, Bengali, Tamil, Telugu and more.

  4. Compare shows the lyrics side by side in two scripts, such as Devanagari and Roman, verse by verse. Choose any script or a translation for each column; on songs and prayers, Show meaning adds the meaning under each verse.

  5. Tap Save to keep this page under Your songs on the home page. Pages you open appear there too, on this device only.

  6. Share sends a link to this page. PDF makes a clean sheet without menus, to save or print.

  7. At the end, Previous and Next take you through the list in order.

All tips

Text: Tamil Wikisource: திருவெழுகூற்றிருக்கை (Wikisource contributors (see the page history)),CC BY-SA 4.0, retrieved 2026-10-26. Other scripts and the Roman transliteration are generated automatically.